KalviApp

பரோடா மற்றும் ஸ்டேட் வங்கிகளில் 952 பணி

December 25, 2018

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. அவை எம்.எம்.ஜி-ஸ்கேல் 2,3 மற்றும் ஜே.எம்.ஜி.-ஸ்கேல்-1 தரத்திலான பணிகள் ஆகும். பணிப் பிரிவு வாரியான காலி யிட விவரம் வருமாறு: சட்டம் - 60 பேர், சேல்ஸ் - 850 பேர், ஆபரேசன்ஸ் - 3 பேர்.

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி இளநிலை பட்டப்படிப்பு, நிர்வாகம், சேல்ஸ் சார்ந்த முதுநிலை படிப்பு அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர் காணல் ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 26-ந் தேதியாகும். 10-1-2019-ந் தேதி வரை அப்ளிகேசனை பிரிண்ட் எடுக்க முடியும்.

விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/bobsplnov18 என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். கூடுதல் விவரங்களை www.bankofbaroda.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Important Events Dates
Commencement of on-line registration of application 05/12/2018
Closure of registration of application 26/12/2018
Closure for editing application details 26/12/2018
Last date for printing your application 10/01/2019
Online Fee Payment 05/12/2018 to 26/12/2018