KalviApp

1,326 நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்கள்

December 28, 2019

மத்திய அரசின் நிலக்கரி இந்தியா நிறுவனத்தில் 'மேனேஜ்மென்ட் டிரைனி பிரிவில் 1,326 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: மைனிங் 288, எலக்ட்ரிக்கல் 218, மெக்கானிக்கல் 258, சிவில் 68, பைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ் 254, எச்.ஆர்., 89, மார்க்கெட்டிக் சேல்ஸ் 23, கம்யூனிட்டி டெவலப்மென்ட் 26, சிஸ்டம்ஸ் 46, மெட்டீரியில் மேனேஜ்மென்ட் 28, கோல் பிரிபிரேசன் 28 என 1,326 இடங்கள் உள்ளன.

வயது தகுதி: 1.4.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங், பட்டப்படிப்பு என பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1,000. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 19.1.2020

விபரங்களுக்கு: www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf